நான் திரும்பி வந்து தரையில் காலூன்றுவேன்! அது சுதந்திரத் தமிழீழ மண்ணாக இருக்கும்: உருத்திரகுமார் நம்பிக்கை
நான் திரும்பி வந்து 'தரையில் காலூன்றுவேன்' என உறுதியாக நம்புகிறேன். அது சுதந்திரத் தமிழீழ மண்ணாக இருக்கும் என நாடு கட ந்த அரசாங்க பிரதமர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இன்றைய முக்கியமான நாளில் கொடுத்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..அந்த பேட்டி வருமாறு:
கேள்வி:-
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் அங்கம் வகிக்குமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். உங்கள் கால்களை தரையில் ஊன்றி ஏதாவது செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா ?
பதில்:-
நான் 1982ம் ஆண்டில் சிறி லங்காவை விட்டு வெளியேறிய போது, எனது ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிறிலங்காவிற்குத் திரும்புவதே எனது நோக்கமாக இருந்தது. 1983 இனப்படுகொலைக்குப் பின்னர், எனது தகமைச் சான்றிதழ்களின் அடிப்படையில், வெளியில் இருப்பதன் மூலம் எமது மக்களின் விடுதலைக்கு காத்திரமான பங்களிக்க முடியும் என உணர்ந்தேன்.
தமிழர்களுக்கு நீதி கிடைக்கவோ அல்லது அவர்களின் அரசியல் பெரு விருப்பினை முழுமையாக வெளிப்படுத்தவோ இடமில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, நான் தீவுக்கு வெளியே தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
நான் திரும்பி வந்து 'தரையில் காலூன்றுவேன்' என உறுதியாக நம்புகிறேன். அது சுதந்திரத் தமிழீழ மண்ணாக இருக்கும் என கூறியுள்ளார்.