யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்
Kanimoli
2 years ago
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(25.11.2022) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திரகுமாரன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முப்படையினர், பொலிஸார், சுகாதார துறை அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரி, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் என பல்வேறுபட்ட தரப்புகளும் பங்கேற்றுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையை தடுத்தல், போதைப்பொருள் பாவனையாளர்களை மீட்டெடுத்தல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.