வடக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள்!
வடக்கில் மிக எழுச்சியாக மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் அரசியல் துறைப் போராளி வேங்கை தலைமையில் நேற்று (25.11.2022) மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கணவன் மற்றும் சகோதரியை மாவீரராக கொண்ட கந்தசாமி சுமதி என்பவர் பொதுச் சுடரை ஏற்றி வைக்க முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் ஏனைய சுடர்களை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மாவீரர்களின் பொது நினைவு படத்திற்கான மலர் அஞ்சலி இடம்பெற்றுள்ளது.
அத்தோடு கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் அமர்வு நேற்று (25.11.2022) தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.
சபையில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.