முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கிழக்கு மாகாண மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கிழக்கு மாகாண மாவீரர்களை  நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

முல்லைதீவு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில்  கிழக்கு மாகாண மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

முல்லைதீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கிழக்கு மாகாண போராளிகளே அதிகளவில் விதைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நினைவுகூருவதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு கிழக்கு மாகாண மாவீரர்களின் குடும்பம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துயிலுமில்லத்தில் எதிர்வரும் மாவீரர் தினத்தில் கிழக்கு மாகாண மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலிருந்து மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாளை (27.11.2022) அம்பாறையிலிருந்து பேருந்து முல்லைதீவு நோக்கி செல்லவுள்ளதுடன் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து நினைவேந்தலுக்கு வரவிரும்பும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 0754346668என்னும் தொலைபேசியுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!