சீனா வழங்கிய டீசலுடன் சுப்பர் ஈஸ்டர்ன் கப்பல் நாட்டை வந்தடைவு: பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தரையிறக்கம்

Mayoorikka
2 years ago
சீனா வழங்கிய டீசலுடன் சுப்பர் ஈஸ்டர்ன் கப்பல் நாட்டை வந்தடைவு: பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தரையிறக்கம்

 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் உள்ள டீசல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னர் அதனை தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

‘சுப்பர் ஈஸ்டர்ன்’ என்ற டீசல் கப்பல் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலிலுள்ள எரிபொருள் தொகை எரிசக்தி அமைச்சிடம்  ஒப்படைக்கப்பட்டு, தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும் என்றும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் மற்றும் மீன்பிடித்துறைக்காக சீன அரசாங்கம் 9,000 மெட்ரிக் தொன் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் டீசலை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவினால் 9,000 மெட்ரிக் தொன் டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதத்திலும் டிசம்பரிலும் குறித்த டீசல் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!