தனிமையில் இருந்த மைத்திரி – முன்னாள் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட விழாவில் மக்கள் கூட்டம் இல்லை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ளவில்லை என செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் நெருக்கடிகளைத் தீர்க்கும் தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக அறிவுசார் போராட்டம் ஏற்பாடு செய்திருந்த கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் இன்று (26) காலை இது குறித்து தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் நெருக்கடிகளைத் தீர்க்கும் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது புத்தகம் உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த வைபவத்திற்காக அதிகளவான மக்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை காணப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் 10 பேர் மாத்திரமே இதில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.