மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு
Kanimoli
2 years ago
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபா செலவிடப்படுகின்றது. ஆனால் நாங்கள் ஒரு அலகுக்கு 29 ரூபாய் மாத்திரமே வசூலிக்கின்றோம். இதனால் பெரும் நஷ்டத்தை அடைகின்றோம்.
எங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணையை யாரும் இலவசமாக வழங்கவில்லை. மேலும் எரிபொருள் விலையில் முடிவு எடுக்கப்படாததால் நாங்கள் நஷ்டம் அடைகிறோம்.
எனவே ஜனாதிபதியோ, நிதியமைச்சரோ அல்லது அரசாங்கமோ யார் வந்தாலும், இனி கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.