இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41,308 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41,308 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6,09,566 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த மாதத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ரஷ்யாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை 10,066 ஆகக் காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்து 7,021 பேரும் பிரித்தானியாவில் இருந்து 3,276 பேரும் நவம்பர் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவில் இருந்தே அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
மேலும் இந்தியாவில் இருந்து 1,02,508 பேரும் இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.