நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள்!

Nila
2 years ago
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை தடுத்து  வைக்க முடியும் என்ற போதிலும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் தற்போது அதனை விட இருமடங்கு கைதிகள்  அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில சிறைச்சாலைகள் அதன் கொள்ளளவை  300% அளவில்  தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக அதிகரித்து, நவம்பர் 25 ஆம் திகதி  வரை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 26,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,000 கைதிகளில் சுமார் 38% போதைவஸ்து தொடர்புடைய கைதிகள் ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

தரவுகளின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை, மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 50% அதிகமாக உள்ளது என்றும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!