பொலிஸ் புலனாய்வுத் துறையினருடன் சிறீதரன் எம்.பி வாக்குவாதம்
Prathees
2 years ago
மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வன்னேரிக்குள வட்டாரத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர்.
இந்நிலையில் தொலைபேசி பறித்ததைக் கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அங்கு நின்ற பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீள தொலைபேசியை பெற்றுக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.