இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையினையும் மீறி வடமராட்சி எள்ளங்குளத்தில் அஞ்சலி!
Mayoorikka
2 years ago
வடமராட்சி உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் “551ஆவது படைப்பிாிவு” முகாம் அமைத்து தங்கியுள்ள நிலையில், துயிலும் இல்லத்திற்கு வெளியே ஈகைச் சுடரேற்றி மாவீரா்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டிருக்கின்றது.
இதன்போது குறித்த பகுதியில் வீதியின் இரு பக்கங்களிலும் வீதி மறிப்புக்கள் போடப்பட்டு இராணுவத்தினா் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.