மாவீரர் நாள் நினைவேந்தல்: அவசரமாக ரணில் வெளியிட்ட அறிவிப்பு
Mayoorikka
2 years ago
இலங்கை ஜனநாயக நாடு நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பகிரங்கமாக மேற்கொள்ளப்படும் நிலையில், அதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கின்றதா என ஊடகமொன்று கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
“இலங்கை ஜனநாயக நாடு எனச் சுட்டிக்காட்டியுள்ள ரணில், நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு இனமும் மரணித்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு எனவும் இதைவிட வேறு எந்தக் கேள்வியும் தற்போதைய நிலைமையில் அவசியமற்றது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.