தமிழர் தாயகப் பகுதியில் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீர் நாள் அனுஷ்டிப்பு
Mayoorikka
2 years ago
தமிழ் மக்களினால் உணர்வெழுச்சியுடன் தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.
வடக்கு கிழக்கில் இம்முறை 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், அந்த இடங்களில் மாவீரர் பெற்றோர்கள் - உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.