இறக்குமதி தடை நீக்கப்பட்டாலும் கட்டுமானத் துறை பாதிக்கப்படும்: இலங்கை தேசிய நிர்மாண சங்கம்

Prathees
1 year ago
இறக்குமதி தடை நீக்கப்பட்டாலும் கட்டுமானத் துறை பாதிக்கப்படும்: இலங்கை தேசிய நிர்மாண சங்கம்

நிர்மாணத்துறைக்கு தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நிர்மாணத்துறையின் செயற்பாடுகளை வழமை போன்று மேற்கொள்ள முடியாது என இலங்கை தேசிய நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.

நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள கைத்தொழில்துறையினர் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களை மறுசீரமைத்தால் நிர்மாணத்துறை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அரசு நிர்மாணப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டிய தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் வங்கி வட்டி அதிகமாக இருப்பதால் ஒப்பந்ததாரர்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!