இலங்கை, இரண்டாயிரம் ஆண்டுகளாக நெருங்கிய உறவைப் பேணி வருகிறது - பாலித கோஹன

Kanimoli
1 year ago
 இலங்கை, இரண்டாயிரம் ஆண்டுகளாக நெருங்கிய உறவைப் பேணி வருகிறது - பாலித கோஹன

சீனாவுடன், இலங்கை இராச்சியம் மற்றும் இன்றைய இலங்கை, இரண்டாயிரம் ஆண்டுகளாக நெருங்கிய உறவைப் பேணி வருகிறது.
இந்த கருத்தை சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
சீன- இலங்கை உறவு தொடர்பான அவரின் கருத்துக்களை ஐடிஎன் என்ற செய்தித்தளம் தொகுத்துள்ளது.
இலங்கையின் வெளிப்படையான மூலோபாய ஈர்ப்பு, இயற்கை செல்வம் மற்றும் இணக்கமான வாழ்க்கை நிலைமைகள் இருந்தபோதிலும், சீனா, இலங்கை நாட்டில் நிரந்தர இருப்பை நிறுவவோ அல்லது காலனித்துவப்படுத்தவோ முயற்சித்ததாக எந்த பதிவும் இல்லை என்று கொஹன தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக இருந்தது மற்றும் பௌத்த தொடர்புகள் ஆரம்பகால கலாசார பரிமாற்றங்களை உருவாக்கியது.
சீனாவில் ஹான் வம்சத்தின் காலத்திலிருந்தே, கடல்சார் பட்டுப் பாதையில் உள்ள பரிமாற்றங்கள் கி.மு 207 இல் செழிக்கத் தொடங்கியதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.
பண்டைய தலைநகரான அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அபயகிரிய மடாலயத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த ஐந்தாம் நூற்றாண்டின் அறிஞரான சீனாவின் ஷாங்சியைச் சேர்ந்த துறவியான ஃபா சியானின் எழுத்துக்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளின் கதையைச் சொல்வதாக கொஹன குறிப்பிட்டுள்ளார்.
வட இந்தியாவில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் வாழ்ந்த அவர் கி.பி 410 இல் இலங்கைக்கு வந்தார்.
அவர் சீனாவுக்கு திரும்பியபோது, சிங்கள மொழியில் எழுதப்பட்ட சமய நூல்களை இலங்கையிலிருந்து சீனாவுக்கு எடுத்துச் சென்றார்.
இன்றும் ஹெனான் மாகாணத்தின் டெங்ஃபெங் கவுண்டியில் உள்ள ஷாலின் கோயில், இலங்கையின் முக்கிய கோயில்களுடன் நெருங்கிய மதத் தொடர்புகளைப் பேணுகிறது.
சீனாவிற்கு கன்னியாஸ்திரிகளின் வரிசையை அறிமுகப்படுத்துவதற்காக, சிங்கள கன்னியாஸ்திரிகளின் குழுவொன்றின் வருகை இடம்பெற்றுள்ளது.
கி.பி 428 இல், இலங்கையின் மஹாநாம அரசர், சீனப் பேரரசருக்குப் புனிதப் பல்லக்குக் கோயிலின் மாதிரியை அனுப்பினார்.
இலங்கை மன்னன் ஒரு மதிப்புமிக்க புத்தர் சிலையுடன் ஒரு தூதரகத்தையும் பேரரசர் சியாவோவின் அரசவைக்கு அனுப்பினார். 10 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் மண்டை ஓடு எலும்பின் ஒரு பகுதி இன்று நான்ஜிங்கில் உள்ள உஸ்னிசா அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சீன நாணயங்கள் மற்றும் பீங்கான்கள் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு செழிப்பான வர்த்தகத்தை பரிந்துரைக்கின்றன.
கரடுமுரடான வானிலையில் மூழ்கியதால், ஏராளமான சீனக் கப்பல்கள் இலங்iயின் கடலுக்கு அடியில் புதையுண்டுள்ளன.
பாரம்பரியத்தின் படி, ஹெனானின் லுயோயாங்கில் உள்ள வெள்ளைக் குதிரைக் கோயில், சீனாவில் கட்டப்பட்ட முதல் புத்த கோயில் ஆகும்.
வெள்ளைக்குதிரை ஆலயம் இலங்கை பாணியில் ஆலயம் அமைப்பதற்கு காணியை ஒதுக்கியுள்ளது.
அட்மிரல் ஜெங், 1405 மற்றும் 1433 க்கு இடையில் மிங் பேரரசரை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கு நாடுகளுக்கு தனது பயணத்தின் போது ஆறு முறை இலங்கைக்கு விஜயம் செய்தார்.
ஏழாம் பராக்கிரமபாகுவால் வெளியேற்றப்பட்ட இலங்கை மன்னருக்குப் பதிலாக ஆறாம் பராக்கிரமபாகுவை நியமித்ததில் அட்மிரலின் ஈடுபாடு நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இலங்கை, சீனாவுடன் சமய, வர்த்தக மற்றும் சமூக உறவுகளை வளர்த்துக்கொண்டது என்பது தெளிவாகிறது என்று பாலித கொஹன தமது பதிவுகளை  சீன ஊடகத்துடன் பகிர்ந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!