2026இல் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்போம்!- இலங்கை அரசாங்கம்

Kanimoli
1 year ago
2026இல் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்போம்!- இலங்கை அரசாங்கம்

இலங்கை, 2026 ஆம் ஆண்டில், நெருக்கடியை மீட்டெடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஷெஹான் சேமசிங்க ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டின் நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
'எங்களுக்கு ஒரு இலக்கு உள்ளது, 2026 ஆம் ஆண்டு மீண்டும் வளர்ச்சிக்கு செல்லலாம் மற்றும் நெருக்கடிக்கு முந்திய நிலையை பார்க்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.' என்று இதன்போது கூறியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு திரும்பச் செய்யவுள்ளதாக தொடர்ந்தும் கூறிவருகிறார்.
இந்தநிலையில் '2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2025 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை நிர்ணயிக்கும், 2026 ஆம் ஆண்டளவில் நாம் ஒரு சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும்' என்று ராஜாங்க அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய சபைக்கு முன்மொழிவு ஒன்றை முன்வைப்பதற்கான டிசம்பர் காலக்கெடுவை சந்திக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் அயராது உழைத்து வருவதாக சேமசிங்க கூறியுள்ளார்.
இதுவே எங்களின் முதன்மையான இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!