வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

Prabha Praneetha
3 years ago
வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வீசாக்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது.

அதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.

குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்கு 55 டொலராகவும் திருத்தப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4