நாமே இலங்கையின் உண்மையான நண்பன் - சாணக்கியனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சீனா

Nila
1 year ago
நாமே இலங்கையின் உண்மையான நண்பன் - சாணக்கியனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சீனா

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை தாம் ஊக்குவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருவதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாகவும் தூதரகம் கூறியுள்ளது.

சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் நாட்டிற்கு பயணம் செய்து வருவதாகவும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அது கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல என்று குறிப்பிட்டார்.

உண்மையான நண்பராக இருந்தால், ஏன் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா உதவவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!