பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை - 3 கட்டங்களின் கீழ் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள்!

Nila
3 years ago
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை - 3 கட்டங்களின் கீழ் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள்!

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்றுடன் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளவுள்ளதுடன், அது மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, முதலாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 22 திகதி வரை இடம்பெறும்.

இதனையடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை மூன்றாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4