எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு புதிய ஏற்பாடு! குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

Mayoorikka
2 years ago
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு புதிய ஏற்பாடு!  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் கைவிரல் ரேகைகளைக் கொடுக்க மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும் , இதற்காக 50 அலுவலகங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இணையவழியில் பணம் செலுத்துபவர்களுக்கு கடவுச்சீட்டை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்வதற்கும் , சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!