வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மற்றும் மான்கொம்புகளுடன் ஒருவர் கைது

Prasu
3 years ago
வீடொன்றில்  மறைத்துவைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மற்றும் மான்கொம்புகளுடன் ஒருவர் கைது

மாங்குளம் கல்கூவாறி பகுதியில்   வீடொன்றில்  மறைத்துவைக்கப்பட்ட நிலையில் உள்ளூர் நான்கு  மான் கொம்புகள், இரண்டு துப்பாக்கிகள், 100 கிராம் ஈயம், தீக்குச்சிமருந்து, துப்பாக்கிரவைகள் மற்றும்  வாள்  மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகன் திணைக்களத்தினர்  நேற்று (01) மாங்குளம் பகுதியில்  உள்ள கல்குவாறிப்பகுதியில்  கடமையில் ஈடுபட்டிருந்தவேளை கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய  இவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4