தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை அபகரித்து சென்றுள்ள சம்பவம் பதிவு

Kanimoli
3 years ago
தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை அபகரித்து சென்றுள்ள சம்பவம் பதிவு

தாதி ஒருவர் கடமை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை அபகரித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவருக்கே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதனை நிட்டம்புவ தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த தாதி வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நிட்டம்புவ தலைமையக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாதியின் கணவர் பேலியகொட தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான காவல் பரிசோதகர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் நிட்டம்புவ காவல் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4