பஸ்ஸிக்காக காத்திருந்த தாதி ஒருவரின் கையை கத்தியால் வெட்டிவிட்டு கைப்பை திருடிய நபர்கள்

Prathees
3 years ago
பஸ்ஸிக்காக காத்திருந்த  தாதி ஒருவரின் கையை  கத்தியால் வெட்டிவிட்டு கைப்பை திருடிய நபர்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவரின் கையை கத்தியால் வெட்டிவிட்டு கைப்பையை  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (5) காலை நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள சூப்பர் துணிக்கடை ஒன்றிற்கு அருகில் பஸ்ஸிற்காக காத்திருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த தாதி வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நிட்டம்புவ தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாதியின் கணவர் பேலியகொட தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாதி பஸ் நிலையத்தில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் அருகில் வந்து அவரது கையை வெட்டிவிட்டு பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4