கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அரச அனுமதி - ஹர்ஷடி சில்வா
Prasu
2 years ago
அரச நிதிக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கசினோ வியாபாரத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் கசினோ வியாபாரத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் விதிமுறைகளுக்கு அரச நிதிக்குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது என அரச நிதிக்குழுவின் தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அரச நிதிக்குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.



