2023 பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Nila
1 year ago
2023 பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் வேலுகுமார் ஆகியோரே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், கடந்த நவம்பர் 14ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று, கடந்த 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, 37 மேலதிக வாக்குகளால், இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.அதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்த நிலையில், அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு டீ.ஜே.செனவிரட்ன, பிரியங்கர ஜயரட்ன ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!