கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய சந்தர்ப்பம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



