உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
Prathees
2 years ago

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி இம்மாதம் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 26ஆவது பிரிவின் பிரகாரம் இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பு தேர்தல் தொகுதிக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும். கம்பஹா தொகுதிக்கு 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் குருநாகல் தொகுதிக்கு 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டி தொகுதிக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரத்தினபுரி தொகுதிக்கு 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் களுத்துறை தொகுதிக்கு 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.



