அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.12.2022

மேஷம்
அசுவினி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
பரணி: இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டு.
கார்த்திகை 1: வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரோகிணி: புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். உங்கள் அணுகுமுறைகளை மற்றவர்கள் பாராட்டுவர்.
மிருகசீரிடம் 1, 2: பேச்சு வார்த்தையின் மூலமாக ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். நன்மையான நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும்.
திருவாதிரை: வேலைப் பளு அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும்.
புனர்பூசம் 1, 2, 3: யோசித்து செயல்பட வேண்டிய நாள். மனதில் பல்வேறு சிந்தனைக்கு இடமளிக்க வேண்டாம்.

கடகம்
புனர்பூசம் 4: வரவை விட செலவுகள் அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை.
பூசம்: வெளியூர் பயணம் செல்வீர்கள். அதனால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வழக்கு இழுபறியாகும்.
ஆயில்யம்: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்
மகம்: பொருளாதார நெருக்கடி அகலும். வராமல் இருந்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும்.
பூரம்: உங்களுக்குப் பிரியமானவரை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும்.
உத்தரம் 1: நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம்: தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலிதமாகும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள்.
சித்திரை 1, 2: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும்.
சுவாதி: யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தடைகள் விலகும்.
விசாகம் 1, 2, 3: பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும். தள்ளிப்போன முயற்சிகள் நிறைவேறும்.

விருச்சிகம்
விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
அனுஷம்: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. எதிர்பாராத சங்கடங்களை இன்று சந்திக்க நேரும்.
கேட்டை: குடும்பத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.

தனுசு
மூலம்: மனம் மகிழும்படியான சம்பவங்கள் இன்று நடைபெறும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்ப்புகள் அகலும். சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை நிறைவேற்றி முடிப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். புதிய வேலைக்காக முயற்சி மேற்கொள்வீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வரவு திருப்தியாகும்.
சதயம்: உங்களது முயற்சி ஒன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்ப சொத்தில் இருந்த பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும்.

மீனம்
பூரட்டாதி 4: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.
உத்திரட்டாதி: குடும்ப உறவுகளால் டென்ஷன் அதிகரிக்கும். நண்பரின் ஆதரவு உங்கள் சங்கடத்தை அகற்றும்.
ரேவதி: செயல்களில் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!