நுரையீரல் நோயால் இறப்பவர்கள் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல் 

Prathees
1 year ago
நுரையீரல் நோயால் இறப்பவர்கள் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல் 

நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழப்பவர்களில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்ட மரண விசாரணை அதிகாரியின் சாட்சியப் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐஸ் போதைப்பொருள் பாவனையில் நேரடியாக ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 2 அல்லது 3 வருடங்களில் மரணமடைவார்கள் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹெராயின் போதைக்கு அடிமையாகி இருந்த முதியவர்கள் தற்போது ஐஸ் போதைப்பொருளுக்கு மாறியதன் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!