இலங்கை தற்போது மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிப்பு

Kanimoli
1 year ago
இலங்கை தற்போது மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிப்பு

இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாட்டின் விளைவு, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றுடன், இலங்கை தற்போது மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொழும்பு நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 மாவட்டங்கள் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நச்சு வாயுக்களை சுவாசிப்பது சில நேரங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வீட்டை விட்டு வெளியே சென்றால் முகக் கவசங்களை அணியுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு தெற்கு நோக்கி பலத்த காற்று வீசி வருவதால் டெல்லியை சுற்றியுள்ள மோசமான காற்று தற்போது இலங்கையை கடுமையாக பாதித்துள்ளது.

அதற்கமைய, நேற்று பிற்பகல் வரை கொழும்பு உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்தது. இதில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் தலைநகரான புதுடில்லி அருகே காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை செய்த பிறகு வைக்கோல் போன்ற எச்சங்களை எரிப்பதுதான் இதற்கான காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைச் சேர்ப்பதன் மூலம் இந்த நிலை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

தலைநகர் டெல்லியின் வளிமண்டலத்தில் ஒரு கன மீட்டர் காற்றில் சுமார் 400 தீங்கு விளைவிக்கும் நுண்ணிய துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அது பொதுவாக 50 தீங்கு விளைவிக்கும் காற்றுத் துகள்கள் குறைவாக காணப்பட வேண்டும்.

அதற்கமைய, தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொழும்பு நகரிலும் டெல்லியின் அதே நிலை காணப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால், அது நல்ல காற்றின் தரமாகவும், அதிக மதிப்புகளைக் காட்டினால், அது மாசுபட்ட காற்றின் தரமாகவும் கருதப்படுகிறது.  காற்றின் தரக் குறியீட்டில் 151 என்ற எண்ணை தாண்டினால், அது கடுமையான காற்று மாசுவாக கருதப்படுகிறது.

கொழும்பு மாநகரில் காற்று மாசு ஏற்படுவதற்கு முன்னர், தாமரை கோபுரம் ட்ரோன் காட்சிகளில் நன்றாகத் தெரிந்தது, ஆனால் நேற்று முதல் அது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!