சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ரத்து!

Mayoorikka
1 year ago
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ரத்து!

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாளை (10) நடைபெறவிருந்த மாநாட்டின் முன்பதிவை, மண்டபத்தின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இந்த நிகழ்வின் நோக்கம் 'அறகலய'வை( போராட்டத்தை) ஊக்குவிக்கும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம், சுதந்திரம் மற்றும் நீதிக்கான உண்மை என்ற தொனிப்பொருளின் கீழ் நாளை சனிக்கிழமையன்று, மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக, குழு அறை ஒன்றுக்கான பணத்தை செலுத்தி முன்பதிவும் செய்யப்பட்டிருந்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் பி.சி.யின் அனுசரணையில் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது.

எனினும் நேற்று, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்  நிர்வாகம், ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு, நிகழ்வு ரத்துச்செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
1973-ம் ஆண்டு முதல் அதன் சட்டத்தின்படி எந்த ஒரு அரசியல் நிகழ்வும் வளாகத்தில் நடைபெறக் கூடாது என்பதுதான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு எவ்வாறு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நிகழ்வின் கருப்பொருள் 'அறகலயா' (போராட்டம்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதனை அனுமதிக்கமுடியாது என்று மண்டப நிர்வாகம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!