இலங்கையில் காற்று மாசுபாடு படிப்படியாக குறைந்து வருகின்றது: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
Mayoorikka
2 years ago

நாட்டின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டின் தாக்கத்தால் இலங்கையில் காற்று மாசு ஏற்பட்டது.
நேற்று பல நகரங்களில் காற்று மாசு அளவு மிக அதிகமாக இருந்த போதிலும், இன்று காலை 09:30 மணிக்கு வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பதுளை நகரின் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது.



