திறன்மிக்க இளைஞர் தலைவர்களை வளர்க்க புதிய இயக்கம் ஆரம்பம்
Prathees
2 years ago

நாட்டில் பொது பதவியை நாடும் திறன்மிக்க இளைஞர் தலைவர்களை வளர்ப்பதற்கு அரகலயாவின் புதிய இயக்கம்- அரகலயா எக்ஸ்கோர் என்ற பெயரில் இன்று இயக்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச எதிர்ப்பு அரகலய எதிர்ப்பாளர்கள், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு இளம் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அரசியல்கட்சி அல்ல, ஆனால் இது சாத்தியமான வேட்பாளர்களை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு இயக்கம் என்று அரகலய எக்ஸ்கோரின் ஒருங்கிணைப்பாளர் நிபுன் தாரக கூறியுள்ளார்.
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்குள் தங்கள் பிரதிநிதிகளை தயார்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



