மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இடைநிறுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் உப பரிசோதகர் சுகத் மெண்டிஸ் தற்போது மீளப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு முழுயான வேதனம் வழங்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
தனக்கு உரிய நடைமுறை மறுக்கப்படுவதாகவும், தவறான முறையில் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறி, சுகத் மெண்டிஸ்: உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், சுகத் மென்டிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
அதன்படி, இந்த மனு மீதான தீர்ப்பு உரிய நேரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே மனுதாரர் தற்போது மீள பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு முழு வேதனமும், வழங்கப்படவேண்டிய ஐந்து வேதன அதிகரிப்புகளும் வழங்கப்படு;ம் என்றும் எனவும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.



