அமெரிக்க தூதுவரின் வலையில் சிக்கிய கோட்டாபய: வீரவன்ச குற்றச்சாட்டு

Prathees
1 year ago
அமெரிக்க தூதுவரின் வலையில் சிக்கிய கோட்டாபய:   வீரவன்ச குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அரகலய என்ற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினார். மறு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை  கட்டுப்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

கேகாலையில் நடைபெற்ற உத்தர லங்கா சபையின் நிகழ்வின்போது, அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

அண்மைய மாதங்களில் முன்னாள் ஜனாதிபதியுடன் அமெரிக்கத் தூதுவர் வழமையான சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மிரிஹானவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட நாளன்று, அமெரிக்கத் தூதுவர் சுங் அவரது வீட்டிற்குச் சென்றார். 

அவர் வந்து அன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டார். தாம், ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் என்றும், அதன் மூலம். ராஜபக்சவுக்கு நிவாரணம் வழங்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக கூறியதாகவும் வீரவன்ச குறிப்பிட்டார்.

இந்தவகையில் அமெரிக்க தூதுவரின் வலையில் கோட்டாபய சிக்கியுள்ளதாக வீரவன்ச மேலும் குற்றம் சுமத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, தாம், எடுத்த அனைத்து முடிவுகளையும், அமெரிக்கத் தூதுவர் சுங்கிடம் தெரிவித்த, பின்னர் அவரது அறிவுறுத்தலின்படி செயற்படுத்தினார். 

எதிர்ப்பாளர்களை அகற்றும் முடிவை முன்னாள் ஜனாதிபதி எடுத்தபோது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பாதிக்கும் என்று கூறி தூதுவர் சுங் அதை தடுத்தார் என்றும் வீரவன்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!