இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இரு இந்தியர்கள் கைது
Prathees
2 years ago
இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 35 கிலோ ஐஸ் என்ற மெத்தம்பெட்டமைன் மற்றும் 50 கிலோ கஞ்சா எண்ணெய் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருவாய் புலனாய்வு துறையினர், தகவல் ஒன்;றின் அடிப்படையில் பரமக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போதே இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.



