விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படலாம் - இந்திய உயர்ஸ்தானிகராலயம்
Kanimoli
2 years ago

விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படலாம் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகராலய உத்தியோகபூர்வ டுவிட்டர் தள பக்கத்தில் இது தொடர்பான தகவல் இன்று பகிரப்பட்டுள்ளது.
கட்டமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
விரைவில் இப்பிரச்சினையை தீர்க்க தாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும், இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



