ஆசிரியரைத் தாக்கிய செந்தில் தொண்டமான்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக பண்டாரவளை பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாடசாலைக்குள் வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தாக்குதலை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மோசமான வானிலை காரணமாக பள்ளியின் கட்டிடங்களை சீரமைக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் மற்றும் பலர் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
இவர்களுடன் ஹல்துமுல்ல உள்ளூராட்சி மன்றத் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உள்ளுராட்சி மன்றத் தலைவருக்கும், குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு.செந்தில் தொண்டமான், ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



