பாடசாலை உபகரணங்களை அதிக விலைக்கு விற்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!
Mayoorikka
2 years ago

பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களில் பதிவு செய்யப்பட்ட விலைகள் மாற்றப்பட்டு அவை தற்போதைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை தற்போதுள்ள விலைகளை மாற்றி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் திடீர் சுற்றிவளைப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தற்போது இது தொடர்பிலான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.



