பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ள்ள சம்பவம் பதிவு

Kanimoli
1 year ago
 பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ள்ள சம்பவம் பதிவு

   கல்முனை பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மீட்கப்பட்ட தங்க சங்கிலி நேற்றையதினம் பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று (13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பஸ் ஒன்றில் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.

இதன்போது 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பஸ்ஸில் தவறி விழுந்துள்ளது. இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் கண்டெடுத்து பஸ் நடத்துனருக்கு தெரியப்படுத்தியதுடன் உரிய நபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில் தனது கழுத்தில் சங்கிலி காணாமல்போனதை அறிந்த பயணி, தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பஸ் நடத்துநரிடம் விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

பஸ்ஸில் தங்க சங்கிலி கண்டெடுக்கப்பட்டதை நடத்துனர் கூறியதுடன் , அதனை வைத்திருப்பவரிடம் ஆதாரங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து தங்க சங்கிலியை கண்டெடுத்த தாதியரை தொடர்பு கொண்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தங்க மாலையின் உரிமையாளரான பெண் பயணி தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் முன்னிலையில் தவறவிடப்பட்ட தங்க மாலை உரியவரிடம் வழங்கப்பட்டது. அதேவேளை தவறவிடப்பட்ட தங்கச்சங்கிலி சுமார் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கச்சங்கிலியை ஒப்படைத்தவருக்கு பொலிஸார் பாராட்டுக்களை கூறியுள்ளனர்.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!