யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளின் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளின் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள்
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் மாதத்தில் மட்டும் 5 ஆயிரத்து 416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறியுள்ளது.



