ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு பாதிப்பாகாது - சாகர காரியவசம்

Prasu
3 years ago
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு பாதிப்பாகாது - சாகர காரியவசம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியமைப்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசியல் நோக்கத்தை விடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவர் தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம். ஆட்சி கவிழும் போது எதிர்க்கட்சி அரசாங்கத்தை அமைப்பது உலக வழக்கம். 

ஆனால் சவால்களை பொறுப்பேற்று அரசாங்கத்தை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் ஆட்சியைப் பொறுப்பேற்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால் அவருடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்திருப்போம். சவால்களை ஏற்க தற்துணிவு இல்லாத எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள். 

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டுக்காக எத்தரப்பினருடனும் கூட்டணி அமைக்க தயார்.  ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைப்பதால் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கட்சியின் தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு வலியுறுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. 

2018 ஆம் ஆண்டு பாரிய சவால்களுக்கு மத்தியில் பொதுஜன பெரமுன 231 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4