கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை,குளிர் காலப்பகுதியில் போர் தொடரும் - ரஷ்யா

#Ukraine #Russia
Prasu
3 years ago
கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை,குளிர் காலப்பகுதியில் போர் தொடரும் - ரஷ்யா

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போர் 10 மாதங்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என ரஷ்யா கூறியுள்ளது. அத்துடன் குளிர் காலப்பகுதியல் போர் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் காலப்பகுதியில், போர்நிறுத்தத்திற்கான சாத்தியப்பாடுகள் குறித்து மொஸ்கோ ஏதேனும் கூறியதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கிரம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

சமாதான உடன்படிக்கைக்கான முதல் படியாக கிறிஸ்துமஸிற்குள் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்குமாறு ரஷ்யாவிடம் உக்ரைன் வலியுறுத்தியிருந்தது. 

ஆனால் பெஸ்கோவ் கடந்த செவ்வாயன்று, ரஷ்யாவின் கட்டுப்பாட்டைக் குறிப்பிட்டு, ஜெலென்ஸ்கி உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் வரை கியேவுடன் சமாதானம் இருக்காது எனக் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரேனிய பிராந்தியங்களின் சில பகுதிகளை ரஷ்யா கடந்த செப்டம்பர் மாதத்தில்; சட்டவிரோத வாக்கெடுப்புகளை நடத்தி தன்னுடன் இணைத்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4