முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்

Kanimoli
3 years ago
முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்

முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது துணவி பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சிறுவனின் பெற்றோர்கள் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அச் சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து அவ் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4