இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளும் அமைப்புகளும் சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளிக்க வேண்டும்

Kanimoli
1 year ago
இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளும் அமைப்புகளும் சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளிக்க வேண்டும்

உத்தேச பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளும் அமைப்புகளும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரையில் இலங்கைக்கான கடன்களை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்காது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய ஆதரவு நாடுகள், பாரிஸ் ஆதரவு குழுவின் நாடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான பிற நாடுகள் இந்த எழுத்துப்பூர்வ சான்றிதழுக்கு தங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற வேண்டும் எனவும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றி, ஜனவரி இரண்டாவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு முன்னர் ஆதரவு நாடுகளின் பரிந்துரையைப் பெற்றால், இலங்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 290 மில்லியன் டொலர் கடனின் ஒரு பகுதி வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளிக்கும் என மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!