எரிபொருள் பதுங்கு குழி அமைக்க போர்ட் சிட்டியில் உள்ள நான்கு நிலங்களை விற்பனை செய்ய முடிவு

Kanimoli
1 year ago
எரிபொருள் பதுங்கு குழி அமைக்க போர்ட் சிட்டியில் உள்ள நான்கு நிலங்களை விற்பனை செய்ய முடிவு

எரிபொருள் பதுங்கு குழி அமைக்கும் வசதியை ஏற்படுத்துவதற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு கொழும்பு போர்ட் சிட்டியில் உள்ள நான்கு நிலங்களை விற்பனை செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது

விமான எரிபொருள் சேமிப்பு நிலையத்தை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த விற்பனை இடம்பெறும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் பெரும் பங்காற்ற முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

போட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரமானது முதல் ஐந்து வருடங்களில் வெளிநாட்டு நேரடி முதலீடாக 5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் துறைமுக நகரை நிர்வகிக்கும் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடும் என்று அவர் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கடலை நிரப்பி; நிர்மாணிக்கப்பட்டு வரும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பிலான, கொழும்பு துறைமுக நகரம், நிதி மாவட்டம், வாழ்க்கை பூங்கா, தீவு வாழ்க்கை, மெரினா மற்றும் சர்வதேச தீவு உட்பட ஐந்து வெவ்வேறு வளாகங்களை உள்ளடக்கியதாக அமையும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!