ஜனாதிபதி சீரற்ற காலநிலை காரணமாக அவரது விமான பயணம் இரத்து

தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் 97 வது கெடட் அணியின் அணி வகுப்பு மரியாதை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான வீடொன்றில் தங்கியிருந்தார்.
ஜனாதிபதி இன்று கொழும்பு திரும்பவிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அவரது விமான பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை விமானப்படையின் இரண்டு உலங்குவானூர்திகள் தியத்தலாவ முகாமில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஜனாதிபதிக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்காக மேலும் இரண்டு உலங்குவானூர்திகள் இரத்மலானையில் இருந்து வீரவில விமான முகாமிக்கு சென்று எரிபொருளை நிரப்பிக்கொண்டு வெல்லவாய பொது விளையாட்டு மைதானத்திற்கு புறப்பட்டுச் சென்றன.
இதனை தவிர மத்தள விமான நிலையத்திற்கு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று சென்று தரையிறக்கப்பட்டிருந்தது.



