உயர்தர பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய தகவல்
Kanimoli
2 years ago

2021 க.பொ.த உயர்தர பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் நாளை முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தகுதி பெறும் மாணவர்களுக்கு நாளை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற பின்னர் அவர்கள் தேர்ந்தெடுத்த துறை மற்றும் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



