ஹங்வெல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் பலி
Prathees
2 years ago

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் உணவக உரிமையாளரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



