பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கலந்துரையாடல்!

Mayoorikka
1 year ago
பாடசாலைகளில்  போதைப்பொருள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில்  பிரேமஜயந்த தலைமையில் கலந்துரையாடல்!

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை விடுவிக்க ஆசிரியர்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டார்.

அத்துடன், அண்மையில், மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்தமை தொடர்பில், பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை தொடர்கிறது.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய சிறுவர் நலன்புரி அதிகாரசபை அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!